இலங்கை

தொடர்ந்து தவறிழைக்கும் யாழ். மாநகர சபை ; கடும் அவதியில் தவிக்கும் மக்கள்

Published

on

தொடர்ந்து தவறிழைக்கும் யாழ். மாநகர சபை ; கடும் அவதியில் தவிக்கும் மக்கள்

யாழ்ப்பாணம் மாநகர சபையானது தொடர்ச்சியாக பல்வேறுவிதமான முறைகேடான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து பல தடைவைகள் வெளிப்படுத்தப்பட்ட போதும்  அவற்றை சீர்செய்யாது அதே தவறுகளை தொடர்ந்து இழைத்த வண்ணம் உள்ளதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Advertisement

வீதியில் குப்பைகளை கொட்டிவிட்டு செல்லுதல், கல்லூண்டாய் பகுதியில் உள்ள கழிவுப் பொருட்களுக்கு தீ வைத்தல், மாநகர சபையின் கழிகவகற்றும் வாகனங்கள் உரிய முறைப்படி செயற்படாமை உள்ளிட்ட மேலும் பல முறைகேடான செயற்பாடுகள் குறித்தான குற்றச்சாட்டுகள் மாநகர சபை மீது முன்வைக்கப்படுகிறது.

உழவு இயந்திரத்தின் பெட்டிக்குள் கழிவுப் பொருட்களை ஏற்றிய பின்னர் அதனை மூடாமல் திறந்த வண்ணம், கழிவுப் பொருட்கள் சேமிக்கும் இடத்திற்கு கொண்டு செல்வதாகவும், இதன்போது பொலுத்தீன் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் காற்றில் பறந்து வீதிகளில் பரவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநகர சபையின் கழிவகற்றும் பல வாகனங்கள்  இலக்க தகடு இல்லாமலே பணியில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு யாழ். மாநகரசபை ஆணையாளரான  ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version