இலங்கை

நடிகர் ஜெயம் ரவிக்கு ஷாக் கொடுத்த ஆர்த்தி; நீதிமன்றம் விடுத்த உத்தரவு !

Published

on

நடிகர் ஜெயம் ரவிக்கு ஷாக் கொடுத்த ஆர்த்தி; நீதிமன்றம் விடுத்த உத்தரவு !

நடிகர் ரவி மோகனிடம் மாதாந்தம்  40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறமை  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான ரவி மோகனுக்கு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் சமீபமாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் அறிவித்தார். ஆனால் இதை தான் எதிர்பார்க்கவில்லை என ஆர்த்தி கூறினார்.

அதன்பின்னர் இருவரும் அடிக்கடி அறிக்கை வெளியிட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

விவாகரத்திற்கு இருவரும் விண்ணப்பித்த நிலையில், கெனிஷாவுடன் ரவி மோகன் பொது இடங்களில் சுற்றி வருகின்றார்.

Advertisement

இந்நிலையில்  நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவகாரத்து மனு மீதான விசாரணை இன்று(21) நடைபெற்றது.

இந்நிலையில் இன்று ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் விவாகரத்திற்கு இருவரும் சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் விவாகரத்திற்கு பிறகான ஜீவனாம்சமாக மாதம் ரூ.40 லட்சம் ரவி மோகன் வழங்க வேண்டும் என ஆர்த்தி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் இதுகுறித்து ஜூன் 12க்குள் ரவி மோகன் பதிலளிக்க குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version