உலகம்

பாகிஸ்தானில் பள்ளிப் பேருந்து மீது தாக்குதல் – 4 குழந்தைகள் பலி

Published

on

பாகிஸ்தானில் பள்ளிப் பேருந்து மீது தாக்குதல் – 4 குழந்தைகள் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குஸ்தாரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர்.

இந்த பஸ், ஜீரோ பாயிண்ட் என்ற இடத்தில் வந்தபோது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சாலையோரத்தில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. 

Advertisement

இந்த வாகனத்தைப் பள்ளி பஸ் கடந்து சென்றபோது குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

இந்த குண்டுவெடிப்பில் பள்ளி பஸ் சிக்கியது. இதில் பஸ்சில் இருந்த குழந்தைகள் படுகாயம் அடைந்து அலறினார்கள். 

உடனே சம்பவ இடத்துக்கு மீட்புப்படையினர், மருத்துவ குழுவினர் விரைந்து வந்தனர். இந்த குண்டுவெடிப்பில் 4 குழந்தைகள் பலியானார்கள். 38 பேர் காயம் அடைந்தனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version