சினிமா

பாக்ஸ் ஆபிஸில் சந்தானத்தை ஓரங்கட்டும் சூரி!! மாமன், DD Next Level 5 நாள் வசூல் இவ்வளவா?

Published

on

பாக்ஸ் ஆபிஸில் சந்தானத்தை ஓரங்கட்டும் சூரி!! மாமன், DD Next Level 5 நாள் வசூல் இவ்வளவா?

தமிழில் கடந்த வாரம் சூரியின் மாமன் திரைப்படமும் சந்தானத்தின் DD Next Level திரைப்படமும் வெளிவந்தது. இதில் மாமன் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. ஆனால், DD Next Level திரைப்படத்திற்கு மோசமான விமர்சனங்களே கிடைத்தன.ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில், சூரியின் மாமன் மற்றும் சந்தானத்தின் DD Next Level ஆகிய இரண்டு திரைப்படங்களும் 5 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.DD Next Level படம் உலகளவில் ரூ. 11 கோடி மட்டுமே 5 நாட்களில் வசூல் செய்துள்ளது. ஆனால், மாமன் திரைப்படம் உலகளவில் ரூ. 17 கோடி வசூல் செய்து DD Next Level படத்தை பாக்ஸ் ஆபிஸில் பின்னுக்கு தள்ளியுள்ளது.இதன்மூலம் வசூலில் பெரிய அடிவாங்கியுள்ளது சந்தானத்தின் DD Next Level. அதேபோல் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி இதுவரை 78 கோடி வரை வசூலித்து வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version