சினிமா
” பெரியபாய் ” என அழைத்த ரசிகர்கள் ..!ஏ.ஆர். ரகுமானின் ரியாக்க்ஷன் என்ன தெரியுமா?
” பெரியபாய் ” என அழைத்த ரசிகர்கள் ..!ஏ.ஆர். ரகுமானின் ரியாக்க்ஷன் என்ன தெரியுமா?
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர் ரகுமான். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம் மற்றும் கிந்தி எனப்பல மொழிக்களில் திரைப்படங்களுக்கு இசையமைத்ததுள்ளார். இவர் தனது பாடல்கள் மூலம் ரசிகர்களை மனதில் இடம் பிடித்துள்ளார். இதனை தொடந்து சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.தற்போது கமல் ,திரிஷா ,சிம்பு ஆகியோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் “thugh life ” படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான புரோமோஷம் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு அளித்த நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது தன்னை “பெரியபாய்” என அழைக்க வேண்டாம் அந்த பெயர் என்னக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.தற்போது சமூக வைத்தளத்தில் வைரல் ஆகும் வீடியோவில் “தங் லைப்” திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் கலந்து கொள்ள வந்த ஏ.ஆர்.ரகுமான் காரில் இருந்து இறங்கி செல்லும் போதும் ரசிகர்கள் அவரை பார்த்து “பெரிய பாய் பெரிய பாய்” என்று அழைத்தற்கு அவர் கொடுத்த ரியாக்க்ஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அதாவது சிறிய சிரிப்போடு கண்ணாடியை அணிந்து கொண்டு சென்றுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.