சினிமா
முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்கணும்.. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்கணும்.. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான். இசையமைப்பாளராக களமிறங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தை பிடித்து வலம் வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவருடைய மனைவி சாயிரா பானு இருவரும் கடந்த 29 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வருடம் நவம்பரில் இவர்கள் பிரிவதாக அறிவித்தனர். ஆனால் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி ஒன்றில் தனது பாடல்களில் இருக்கும் தலைப்பின் வார்த்தையை கேட்டு அவர் மனதில் தோன்றும் விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.அதில், மன்னிப்பாயா என்ற பாடல் வர, அதற்கு தான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். குறிப்பாக நான் எப்போதும் பிஸியாகவே இருந்ததால் எனது மகன், மகள், என் முன்னாள் மனைவி சாயிரா பானு என இவர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.