இலங்கை
முழங்காவிலில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குளிர்பான நிலையத்திற்கு எதிராக தண்டம் விதிப்பு!
முழங்காவிலில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குளிர்பான நிலையத்திற்கு எதிராக தண்டம் விதிப்பு!
பூநகரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்குட்பட்ட முழங்காவில் பகுதியில் இயங்கும் குளிர்பான நிலையம் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வருகின்றமை அவதானிக்கப்பட்டு, முழங்காவில் பொது சுகாதார பரிசோதகர் இ. தர்மிகனால் ஏற்கனவே பல தடவைகள் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பூநகரி மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜெ. றொனால்ட் தலைமையில் முழங்காவில் பொது சுகாதார பரிசோதகர் இ.தர்மிகனும் இணைந்து கடந்த மாதம் 24ஆம் திகதி பரிசோதனை மேற்கொண்டனர். இதன்போது தொடர்ந்தும் சுகாதார சீர்கேடுகளுடன் குறித்த குளிர்பான நிலையம் இயங்கி வருகின்றமை அவதானிக்கப்பட்டது.
இதனையடுத்து குளிர்பான உரிமையாளரிற்கு எதிராக நேற்றையதினம்(20) கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் 10 குறைபாடுகளுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரணைக்கு எடுத்துகொண்ட நீதிவான் குளிர்பான உரிமையாளரை குற்றவாளியாக இனங்கண்டு ரூபா 50,000 தண்டம் விதித்ததுடன், கடுமையான எச்சரிக்கையும் வழங்கினார்.