இலங்கை
முஸ்லிம் காங்கிரஸ் மீது வலுக்கும் சந்தேகங்கள் ; ரவூப் ஹக்கீம் கருத்தால் வந்த வினை
முஸ்லிம் காங்கிரஸ் மீது வலுக்கும் சந்தேகங்கள் ; ரவூப் ஹக்கீம் கருத்தால் வந்த வினை
அண்ணாசி சின்னத்தில் முஷாரப் தேர்தல் கேட்டது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாடா என்ற சந்தேகம் வலுப்பதாக ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸில் முஷாரப் இணைவதில் எனக்கு பிரச்சினை இல்லை என முகா தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்திருப்பதே இந்த சந்தேகம் தோன்றுவதற்கு காரணமென யஹியாகான் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், அது மட்டுமன்றி தேர்தலுக்கு முன்பே முஸ்லிம் காங்கிரஸில் இணைய முஷாரப் முன்வந்தாகவும், அதனை தேர்தலின் பின்னர் மேற்கொள்வோம் என்று தான் கூறியதாக ரவூப் ஹக்கீம் , இன்று குறிப்பிட்டுள்ளார்.
அப்படியென்றால் முஸ்லிம் காங்கிரஸீம் முஷாரபும் தேர்தலுக்கு முன்பே இரகசிய ஒப்பந்தம் செய்திருப்பது இதனூடாக தெளிவடைகின்றது.
பொத்துவில் மக்கள் வழங்கிய ஆணையை முஷாரப் மதிக்க வேண்டும். அவ்வாறின்றின்றேல் பொத்துவில் மக்கள் முஷாரப்பை அரசியலில் இருந்து துரத்துவார்கள்.
மு.காவுடன் இணைந்து முஷாரப் ஆட்சியமைக்க வேண்டிய அவசியமே இல்லை. தனியாக அவரால் ஆட்சியமைக்க முடியும். பொத்துவில் மக்கள் அதற்கான ஆணையை வழங்கியுள்ளார்கள் என்றும் யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.