சினிமா
ரோல் மாடல் சிலைக்கு முத்தமிட்ட அஜித்…! வைரல் ஆகும் வீடியோ…!
ரோல் மாடல் சிலைக்கு முத்தமிட்ட அஜித்…! வைரல் ஆகும் வீடியோ…!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் கார் ரேஸிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தல அஜித். தற்போது நடித்திருந்த குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் வசூலை ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து அஜித் ரோல் மாடலான அயர்டன் சென்னாவின் உருவச்சிலைக்கு முத்தமிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தனது தனித்துவமானா நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர்.கார் ரேஸ் மூலம் உலகத்தின் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் பத்மபூஷண் விருது, பிறந்தநாள், கார் ரேஸிலில் வெற்றி மற்றும் படத்தின் வெற்றி என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திகைத்திருந்தனர். இதனை தொடர்ந்து தற்போது வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது. அதாவது தனது கார் ரேஸ் ரோல் மாடலான மறைந்த அயர்டன் சென்னாவின் உருவச்சிலைக்கு முழந்தாள் படியிட்டு அவரது காலில் முத்தமிட்ட காட்சி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோவை சார் செய்து வருகின்றனர். வீடியோ இதோ..