பொழுதுபோக்கு

ரோஹினி வாங்கிய நகையால் வந்த சண்டை; முத்து சொன்னதால் சமாதானம் ஆன விஜயா: மாற்றம் நிலைக்குமா?

Published

on

ரோஹினி வாங்கிய நகையால் வந்த சண்டை; முத்து சொன்னதால் சமாதானம் ஆன விஜயா: மாற்றம் நிலைக்குமா?

சிறகடிக்க ஆசை சீரியலில், விஜயாவின் மனதை மாற்றலாம் என ரோகிணி வாங்கிய செயின் அவருக்கே பிரச்னையாக வந்து முடிகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ஸ்ருதி இனி அந்த ரெஸ்டாரண்டுக்கு வேலைக்கு போகக்கூடாது ரவியிடம் சொல்ல, அவனோ, அப்படி எல்லாம் உடனே நிற்க முடியாது, என்று சொல்லிவிட்டு கிளம்பி போய்விடுகிறான். மறுபக்கத்தில் அருண் வீட்டுக்கு வரும், சீதாவிடம் அருணை மீண்டும் சஸ்பெண்ட் பண்ணி இருக்காங்க என்று அவருடைய அம்மா பீல் பண்ணி செல்கிறார். இது குறித்து சீதா அருணிடம் விசாரிக்கிறாள்.அருண் ஏற்கனவே சொன்னேனே அவனாலதான் எனக்கு சஸ்பெண்ட் ஆயிடுச்சு என்று சொல்ல, இதை கேட்ட சீதா, இந்த சஸ்பெண்டை நாம சாதகமா பயன்படுத்திக்கிட்டு, எங்க அக்கா மாமாவை வந்து உங்கள சந்திக்க சொல்லுறேன். அவங்க சம்மதம் சொல்லிட்டாங்கன்னா அப்புறம் அம்மாகிட்ட பேசிக்கலாம் என்று சொல்ல,அருண் சந்தோஷப்பட்டு பேசிக் பேசுகிறான். இவர்கள் பேசுவதை கேட்டு அருணின் அம்மாவும் சந்தோஷப்படுகிறார்.இந்த பக்கம் தனது அம்மாவை பார்க்க வரும் மீனாவிடம், சீதாவின் நடவடிக்கை இப்போ சரியில்ல எப்போதும் போனில் பேசிக் கொண்டிருக்கிறார் என்று அம்மா புலம்பி கொண்டிருக்கிறார். அதற்கு மீனா சீதா எந்த தப்பான விஷயமும் செய்ய மாட்டா. நான் அவ கிட்ட பேசுறேன் சொல்ல, அப்போது சீதா அங்கு வந்துவிட, மீனா அவளை தனியாக அழைத்து பேசிக்கொண்டிருக்கிறாள். அப்போது சீதா நாளைக்கு நீயும் மாமாவும் அவரை போய் பார்த்துவிட்டு சொன்னால், அம்மாவிடம் பேசிவிடலாம் என்று சொல்ல, மீனாவும் சரி என்று சொல்கிறார்.மறுபக்கத்தில் ரோகிணி வீட்டிற்கு லேட்டாக வர, விஜயா எங்க போயிட்டு வர என்று சத்தம் போடுகிறார். அப்போது உங்களுக்காக நகை வாங்கிட்டு வந்துருக்கேன என்று ரோஹினி சொல்ல, அதற்கு விஜயா இதெல்லாம் எனக்கு வேண்டாம், நான் கோபத்தில் இருக்கிறேன் என்று நீ நகை வாங்கி கொடுத்து என்ன சமாதானப்படுத்த பார்க்கிறீயா?  முன்னாடி அப்பா செய்வார்னு ட்ராமா போட்டி இப்ப, இதை தந்து ஏமாற்ற பாக்குறீயா என்று கேட்டு கோப்படுகிறாள்.அந்த நேரத்தில் அண்ணாமலை மனோஜ் எல்லோரும் அந்த நகையை வாங்க சொல்லி விஜயாவிடம் சொல்ல, அவரோ முடியாது என்று அடம் பிடிக்கிறாள். அப்போது முத்து நகையை பார்த்து யார் வாங்கியது என்று கேட்க, ரோஹினி வாங்கியது என்று தெரிந்தது, அம்மாவை சமாதானப்படுத்த இந்த நகையை வாங்கி வந்திருபபார் என்று முத்து சொல்ல, விஜயாவின் கோபம் மேலும் அதிகமாகிறது. ஆனாலும் முத்துவை நம்பவைக்க, விஜயா நகையை எடுத்துக்கொண்டு போய்விடுகிறாள.அதைத்தொடர்ந்து மீனாவும், முத்துவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சீதா காதலிக்கும் விஷயத்தை பற்றி மீனா சொல்ல முத்து அதிர்ச்சி ஆகிறான். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version