சினிமா
“லப்பர் பந்து” எனக்கொரு பரிசு மாதிரி..!இயக்குநர் ஷங்கரின் பாராட்டால் எக்சைட்டான ஸ்வாசிகா.!
“லப்பர் பந்து” எனக்கொரு பரிசு மாதிரி..!இயக்குநர் ஷங்கரின் பாராட்டால் எக்சைட்டான ஸ்வாசிகா.!
சினிமா என்பது ஒரு கலையாக மட்டுமல்ல, சில தருணங்களில் வாழ்வையே மாற்றும் சக்தியாகவும் காணப்படுகின்றது. அது சிலருக்கு ஒரு வாய்ப்பாகவும், சிலருக்கு ஒரு வரமாகவும் அமைந்துள்ளது. அந்தவகையில், நடிகை ஸ்வாசிகா சமீபத்திய நேர்காணலில் கலந்து கொண்டு “லப்பர் பந்து” படத்தைப் பற்றியும், அதனால் கிடைத்த அற்புத அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துள்ளார். அவர் கூறிய சில வார்த்தைகள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.அதன்போது ஸ்வாசிகா, “லப்பர் பந்து இல்லையென்றா, இன்று இவ்வளவு மனநிம்மதியோட பேச முடியாது. அந்தப் படம் என் வாழ்க்கையை மாற்றி இருக்குது,” என நெகிழ்ந்தார். தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் சார், “லப்பர் பந்து” படத்தில் ஸ்வாசிகாவின் நடிப்பைப் பாராட்டி வீடியோ ஒன்றில் பேசியிருந்தார். அது குறித்து பெருமையுடன் கூறிய ஸ்வாசிகா, “ஷங்கர் சார் என்னைப் பற்றி பேசுறது, எனக்கு கிடைத்த பரிசு. நான் ரொம்ப மரியாதை கொடுக்கும் டைரக்டர், என்னைப் பற்றி ‘பிரமாதமா நடித்திருந்தா’னு சொல்லுறது… எனக்கு கண்களில் கண்ணீர் வந்துடிச்சு.” என்றார்.மேலும், “நான் நினைத்ததெல்லாம் இந்த படம் மூலமா கிடைத்திருச்சு. இனிமே என்ன வருதுனு எனக்குப் பயமில்லை,” என்று தைரியமாகத் தெரிவித்திருந்தார். முதலில் வாய்ப்பு இல்லாமலும், பாராட்டுக்கள் இல்லாமலும், பல பிரச்சனைகளை சந்தித்து வந்தவர் ஸ்வாசிகா. ஆனால் லப்பர் பந்து படம் அவரது நடிப்பு திறமையை உலகிற்கு காண்பித்து அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்றார்.அத்துடன் இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பு குழுவுக்கும், இயக்குநருக்கும், தன்னை நம்பி வாய்ப்பு அளித்த ஒட்டுமொத்த கலைத்துறைக்கும், ஸ்வாசிகா தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த நேர்காணலில் அவர் பேசிய வார்த்தைகள், சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அவரது திறமையையும், உணர்ச்சிபூர்வமான மனதையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.