இந்தியா

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம்: தடுப்பூசி திறன் குறைவது காரணமா?

Published

on

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம்: தடுப்பூசி திறன் குறைவது காரணமா?

ன் கிழக்கு ஆசியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவிலும் சமீபத்திய வாரங்களில் புதிய கொரோனா பரவல் வழக்குகள் பதிவாகி வருகின்றன. கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து கொரோனா பரவல் வழக்குகள் பதிவாகி உள்ளன. இருப்பினும், பெரும்பாலான வழக்குகள் லேசானவை ஆகும் மற்றும் தீவிரம் அல்லது உயிரிழப்புகள் சம்பந்தப்பட்டவை அல்ல.”இதுவரை, பாதிப்புகள் ஆங்காங்கே பதிவாகியுள்ளன. ஆசியாவில் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சிக்கு காரணமாகக் கருதப்படும் JN.1 துணை-வகை வைரஸ் ஏற்கனவே இந்தியாவில் பரவி வருகிறது. ஓமிக்ரான் வகையைச் சேர்ந்த ‘பைரோலா’ என்று அழைக்கப்படும் BA.2.86-இன் திரிபாகும். இந்த வகை வைரஸ் தற்போதுள்ள நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கவும், மேலும் எளிதில் பரவும் தன்மையையும் கொண்டது. இதுவரை, இது ஓமிக்ரானுடன் தொடர்புடைய அறிகுறிகளிலிருந்து பெரிதாக வேறுபடவில்லை” என்று டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஜதின் அஹுஜா கூறுகிறார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Covid-19 cases rising in India: Is waning vaccine immunity a concern?JN.1 என்றால் என்ன?JN.1 என்பது ஓமிக்ரான் மாறுபாட்டின் துணை-வகையாகும். இந்த வைரஸ் சுமார் 30 பிறழ்வுகளைக் (mutations) கொண்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது என்று அர்த்தமல்ல, மாறாக இது நமது நோயெதிர்ப்பு அமைப்புகளிலிருந்து தப்பிக்க வழிகளைத் தேடுகிறது. இந்த மாற்றங்கள் மேற்பரப்பு ஏற்பிகளிலும், ஸ்பைக் புரதத்திலும் (வைரஸ் நமது செல்களுக்குள் நுழைய உதவும் பகுதி) அமைந்துள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை ஏமாற்றி, வைரஸை மிகவும் எளிதாகப் பரவச் செய்கின்றன.தடுப்பூசி மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறதா?தடுப்பூசியை விட, நாம் சமீபத்தில் ஓமிக்ரான் அலையை கடந்து வந்தோம். memory T cells மற்றும் memory B cells ஆகிய இரண்டையும் தூண்ட முடியும். இவை வைரஸ் அல்லது அதன் ஒத்த மாறுபாட்டை மீண்டும் எதிர்கொள்ளும்போது, அதை எதிர்த்துப் போராடி நோயின் தீவிரத்தைக் குறைக்க முடியும். PLoS Pathogens இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, memory T cells  வைரஸின் பல பகுதிகளை, ஓமிக்ரான் மாறுபாட்டில் உள்ள பகுதிகள் உட்பட, அடையாளம் காணமுடியும். memory B cells ஓமிக்ரான் மாறுபாட்டை அழிக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.தனித்துவமான அறிகுறிகள் எதுவும் உள்ளதா?இல்லை, தற்போது நாம் பார்ப்பது தொண்டை வலி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவைதான். இவை அனைத்தும் காய்ச்சல் போன்ற நோய்களின் அறிகுறிகளை ஒத்தவை. சிலருக்கு குமட்டல், சிலருக்கு முந்தைய அலைகளில் கண்டதுபோல கண் சிவத்தல் (conjunctivitis) இருக்கலாம். ஓய்வு எடுப்பது, நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது, தனிமைப்படுத்திக்கொள்வது மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் (antivirals) உங்களுக்கு உடல்நிலை தேற உதவும்.JN.1 சிக்கல்களுக்கு வழிவகுக்குமா?இணை நோய்களுடன் (co-morbidities) வாழ்பவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு (immuno-compromised) சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு, நாள்பட்ட சிறுநீரக நோய், எச்.ஐ.வி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.புதிய தடுப்பூசிகள் தேவையா?இல்லை. பழைய தடுப்பூசிகள் ancestral strains மட்டுமே உருவாக்கப்பட்டவை. மேலும், அவை பலவீனப்படுத்தப்பட்ட அல்லது செயலிழக்கப்பட்ட வைரஸிலிருந்து தயாரிக்கப்பட்டன. இப்போது உங்களுக்கு Gemcovac-19 போன்ற mRNA தடுப்பூசிகள் தேவை, இவை நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்காக ஒரு புரதத்தை அல்லது அதன் ஒரு பகுதியை உருவாக்க ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட mRNA ஐப் பயன்படுத்துகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்த தடுப்பூசி உடனடியாகக் கிடைப்பதில்லை.புதிய தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமிக்க முடியும், அதேசமயம் மற்ற mRNA தடுப்பூசிகளுக்கு பூஜ்ஜியத்திற்குக் குறைவான வெப்பநிலை தேவைப்படுகிறது. mRNA தொழில்நுட்பம் தடுப்புத் தடுப்பூசிகளுக்குச் சிறப்பாகச் செயல்படுகிறது, ஏனெனில் வளர்ந்து வரும் வகைகளுக்கு ஏற்ப அவற்றை மாற்றியமைக்க முடியும். கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணியுங்கள், கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version