விளையாட்டு

இந்திய இளம் அணியை வழிநடத்தும் சி.எஸ்.கே வீரர்… அதிரடி வீரர் சூர்யவன்ஷி-யும் சேர்ப்பு!

Published

on

இந்திய இளம் அணியை வழிநடத்தும் சி.எஸ்.கே வீரர்… அதிரடி வீரர் சூர்யவன்ஷி-யும் சேர்ப்பு!

இந்திய யு-19 (19-வயதுக்குட்பட்டோர்) கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 4 நாட்கள் போட்டிகள் ( Multi Day matches) கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்த தொடர்களுக்கு முன்னதாக ஒரு பயிற்சி போட்டியிலும் விளையாட உள்ளது. இத்தொடர் வருகிற ஜூன் 24-ம் தேதி முதல் ஜூலை 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய யு-19 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் இடம் பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் படிக்கவும்: Ayush Mhatre, Vaibhav Suryavanshi to headline India U-19 team for England tour; Check full squad for multi-format seriesமும்பை வீரர் அபிக்யான் குண்டு அணியின் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு முக்கிய வீரர்களாக பஞ்சாப் பேட்ஸ்மேன் விஹான் மல்ஹோத்ரா மற்றும் கேரள லெக் ஸ்பின்னர் முகமது எனான் இருக்கிறார்கள். இந்த இருவரும் 2024 ஆம் ஆண்டு சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய இளைஞர் தொடரின் போது ஜொலித்தனர்.முகமது அமான் தலைமையிலான இந்திய யு-19 அணி, இளைஞர் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது. இரண்டு போட்டிகள் கொண்ட ரெட்-பால் தொடரிலும் இந்திய அணி வென்றது. அந்த அணியின் கேப்டனாக மத்திய பிரதேஷ் வீரர் சோஹம் பட்வர்தன் கேப்டனாக இருந்தார். தொடர்ந்து, இந்தியா கோல்ட்ஸ் இளைஞர் ஆசிய கோப்பையில் விளையாடியது. அதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், வங்கதேசத்திடம் தோல்வியுற்றனர். இந்திய அணி ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மவுல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன்), ஹர்வன்ஷ் சிங், ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சவுஹான், கிலன் படேல், ஹெனில் படேல், யுதாஜித் குஹா, பிரணவ் ராகவேந்திரா, முகமது எனான், ஆதித்யா ராணா, அன்மோல்ஜீத் சிங்.காத்திருப்பு வீரர்கள்: நமன் புஷ்பக், டி தீபேஷ், வேதாந்த் திரிவேதி, விகல்ப் திவாரி, அலங்கிரித் ரபோல் (விக்கெட் கீப்பர்).போட்டி தொடர் அட்டவணை:1. பயிற்சி ஆட்டம் – ஜூன் 242. முதல் ஒருநாள் போட்டி – ஜூன் 273. 2-வது ஒருநாள் போட்டி – ஜூன் 304. 3-வது ஒருநாள் போட்டி – ஜூலை 25. 4-வது ஒருநாள் போட்டி – ஜூலை 56. 5-வது ஒருநாள் போட்டி – ஜூலை 77. முதல் 4 நாள் போட்டி – ஜூலை 12-158. 2-வது 4 நாள் போட்டி – ஜூலை 20-23. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version