சினிமா

கெனிஷாவிற்கு கொலை மிரட்டல்..! மிரளவைக்கும் இன்ஸ்டா பதிவு..

Published

on

கெனிஷாவிற்கு கொலை மிரட்டல்..! மிரளவைக்கும் இன்ஸ்டா பதிவு..

பிரபல நடிகர் ஜெயம் ரவி கெனிஷா குறித்த சர்ச்சை இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமணத்துக்கு இவர் தனது நெருங்கிய நண்பியுடன் சேர்ந்து சென்றமை தற்போது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு இருந்தாலும் யார் பக்கம் உண்மை இருக்கின்றது என்பது இதுவரை புரியாத ஒன்றாக இருக்கின்றது.இருவரதும் விவாகரத்து விவகாரம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் மூன்றாவது நபராக பெயரிடப்பட்டிருக்கும் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலியுறுத்தலான பதிலை வெளியிட்டு உள்ளார். மேலும் ஆர்த்தி தனது அறிக்கையில் “எங்களை பிரிய மூன்றாவது நபர் தான் காரணம்” என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கவும் அவர் மேல் பரவிவரும் விமர்சனங்களுக்கு எதிராகவும் கெனிஷா தனது பதிவில்  ” இந்நிலையில் கெனிஷா தற்போது இன்ஸ்டாவில் சில பதிவுகளை போட்டிருக்கிறார். ‘நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண் நடந்ததற்கு நான் தான் காரணம் என உறுதியாக இருந்தால் என்னை நீதிமன்றத்திற்கு வர வையுங்கள். எனக்கு எதிராக வெறுப்பை மட்டுமே நீங்கள் மீடியாவில் பரப்பினால் தயவுசெய்து அதை நிறுத்துங்க. நீங்கள் எனக்கு கொடுக்கும் கமெண்டுகள், சாபம், கொலை மிரட்டல் போன்ற விஷயங்களால் என்ன நிலையில் இருக்கிறேன் என யாராவது யோசித்தீர்களா. கர்மா பற்றி பேசி என்னை குறை சொல்கிறீர்கள். ஆனால் உண்மை வெளியில் வரும்போது உங்களுக்கு எல்லாம் என்ன நடக்கும் என நான் பார்க்க விரும்பவில்லை.” என மிகவும் மனவருத்தத்துடன் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version