சினிமா

சினிமா பாதிக்கணும்னு சூனியம் வைச்சாங்க.!கெளதம் சுந்தர்ராஜன் பகிர்ந்த உண்மைகள்.!

Published

on

சினிமா பாதிக்கணும்னு சூனியம் வைச்சாங்க.!கெளதம் சுந்தர்ராஜன் பகிர்ந்த உண்மைகள்.!

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி உலகத்தில் தனக்கென ஒரு சிறப்பான அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் கெளதம் சுந்தர்ராஜன். தந்தை சுந்தர்ராஜன் போலவே, நயமான நடிப்பு மற்றும்  நகைச்சுவை கொண்ட இவர், சமீபத்தில் நடந்த நேர்காணலில் தனது வாழ்க்கையில் நேர்ந்த அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.இந்த அனுபவம், ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் மீடியா வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய வாழ்க்கையில் நேர்ந்த இந்த விசித்திரமான சம்பவம், பலரும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.நேர்காணலின் போது கெளதம் சுந்தர்ராஜன் கூறியதாவது, “ஒரு நாள் ஒரு லேடி வந்து, என்னைப் பார்த்ததும், உங்க அப்பாவைக் கூப்பிடுங்கன்னு சொன்னாங்க. நான் அவங்களை வீட்டிற்குள்ள வாங்கன்னு அழைத்தேன். ஆனா, அவங்க உள்ள வரமாட்டேன் என்று சொல்லிட்டாங்க.” என்றார்.அந்த பெண் உள்ளே வர மறுத்ததற்குக் காரணம், அந்த வீட்டில் சூனியம் இருப்பது என்பது தான். பின்னர், அந்த லேடி உங்க வீட்டில் சூனியம் இருக்கு என்று கூறியதும், கெளதமின் அப்பா வீடு  முழுவதும் பரிசோதிக்க ஆரம்பித்தார்.தொடர்ந்து அவர் கூறியதாவது, “பிறகு நாங்க வீட்டில தேடினப்ப, ஒரு இடத்தில அந்த விஷயம் இருந்துச்சு. அதில முடி, ஒரு தகடு எல்லாம் இருந்துச்சு…அதோட அந்தத் தகட்டில அண்ணா, தம்பி பாசம் தகர்க்கப்பட வேண்டும், சினிமாத் தொழில் பாதிக்கப்பட வேண்டும்.” என இருந்ததாகவும் கூறியிருந்தார்.இந்த நேர்காணல் பகுதியில் அவர் கூறிய சூனியம் பற்றிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பகிரப்பட்டு வருகின்றது. பலரும் “இந்த மாதிரி விஷயங்களைக் கேட்கவே கஷ்டமாக இருக்கு..!”  என்கிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version