இலங்கை

டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் தொடர்பில் செயலமர்வு மூலம் விளக்கமளிப்பு

Published

on

டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் தொடர்பில் செயலமர்வு மூலம் விளக்கமளிப்பு

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சின் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

புதிய அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாயங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்துவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

Advertisement

அரச சேவை நடவடிக்கைகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்தும் ஆரயாயப்பட்டது.

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்தும் அமைச்சின் செயலாளர்களுடன் பரவலாகக் கலந்துரையாடப்பட்டது.

அரச சேவைகளை மேலும் செயற்திறனுடன் முன்னெடுப்பதற்கும், வீண்விரயம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும் டிஜிட்டல் மயமாக்கலைப் பயன்படுத்துவது குறித்து அமைச்சின் செயலாளர்களுக்கு இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version