சினிமா
தருதல சினிமா வந்துட்டேன்னு சிரிச்சவங்க…இப்ப என் நடிப்பை பாராட்டுறாங்க.!- நடிகர் கார்த்தி
தருதல சினிமா வந்துட்டேன்னு சிரிச்சவங்க…இப்ப என் நடிப்பை பாராட்டுறாங்க.!- நடிகர் கார்த்தி
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனிச்சாதனையாளராக திகழும் நடிகர் கார்த்தி, சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு தனது வாழ்க்கைப் பயணத்தை மிகவும் உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்துள்ளார். இந்த நேர்காணல், அவரின் கல்வி, சினிமாப் பயணம் மற்றும் சமூக பார்வைகள் பற்றிய பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தது.தனது பள்ளிக் கல்வியிலிருந்து பேச ஆரம்பித்த கார்த்தி, “நான் ஒரு சராசரி மாணவனாகத் தான் இருந்தேன். அதாவது, சீரான மதிப்பெண்கள் வாங்கும் மாணவன். எப்போதுமே முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை எனக்கில்லை,” என்று கூறினார். அதே நேரத்தில், “தனக்குப் பிடித்த விஷயங்களைத் தேர்வு செய்து அவற்றை முழுமையாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தீவிர எண்ணம் அவரிடம் இருந்தது.” அது தான் அவரை சாதாரண மாணவரிலிருந்து சிறப்பான ஆளாக உருவாக்கியது எனத் தெரிவித்திருந்தார்.மேலும், “தான் படிச்சு முடிச்சிட்டு அமெரிக்காவில் இருந்ததாகக் கூறியதுடன், அங்கிருந்த காலத்தில், அவர் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை முற்றிலும் மாறியதாகவும் தெரிவித்தார். அத்துடன் படிச்சு முடிச்சிட்டு இந்தியாவுக்கு திரும்பியதும், அமெரிக்காவில படிச்சிட்டு வேலை செய்யாம தருதல சினிமாவுக்கு வந்திட்டு எனப் பலரும் கேலி செய்தார்கள்.” என்றார். அத்துடன், இந்தக் கருத்தை எல்லாம் மனதில் போடாமல் வேலை செய்தால் நினைத்ததை அடைந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார் கார்த்தி. இது ஒரு சாதாரணமான விடயமாக இல்லாமல், இன்றைய இளைஞர்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் கதையாகவே அமைந்துள்ளது.