இந்தியா

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பீர்களா? சிரித்தபடி பதிலளித்த புதுச்சேரி முதல்வர்

Published

on

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பீர்களா? சிரித்தபடி பதிலளித்த புதுச்சேரி முதல்வர்

இந்தியாவில் மத்திய திட்டக்குழு 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் 5 ஆண்டு திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த திட்டக்குழு உருவாக்கப்பட்டது. இந்த திட்டக்குழு ஆண்டுதோறும் கூடி நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி அதற்கேற்ற முடிவுகளை எடுத்து வந்தது. இதனிடையே, 2015ம் ஆண்டு மத்திய திட்டக்குழு மாற்றப்பட்டு, நிதி ஆயோக் அமைப்பாக உருவாக்கப்பட்டது. நிதி ஆயோக் தலைவராக பிரதமர் மோடி உள்ளார்.நிதி ஆயோக்கின் கூட்டம், பிரதமர் தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜூலையில் டெல்லியில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல பிரதேசம், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள் அந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் அதில் பங்கேற்காத நிலையில், மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஆனால் 5 நிமிடங்களுக்கு மேல் பேச வாய்ப்பு தரவில்லை என கூறி கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளியேறினார்.இந்நிலையில், நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் 24ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.இந்த நிலையில், இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பீர்களா? என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “நன்றி வணக்கம்” என்று சிரித்தபடி பதிலளித்து விட்டு எழுந்து சென்றார். மேலும் அவர் கூறுகையில் ‘இரண்டு கிலோ கோதுமை மிக விரைவில் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட உள்ளது. அரிசி தற்போது வழங்கப்பட்டு வருகிறது.  தொடர்ந்து வழங்குவதற்கு கவர்னரிடம் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த கோப்பு கயத் ஆகிவிடும். அதனைத் தொடர்ந்து அரிசி வழங்கப்படும்’ என்று அவர் கூறினார். #Watch | “நன்றி.. வணக்கம்..”நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு சிரித்தபடி பதிலளித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி.#SunNews | #Puducherry | #CMRangasamy pic.twitter.com/9DFMshG4Jeசெய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version