இந்தியா
மகாராஷ்டிராவில் 52 பேருக்கு கொரோனா தொற்று!
மகாராஷ்டிராவில் 52 பேருக்கு கொரோனா தொற்று!
இந்தியாவின் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு காரணமாக 52 பேர் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மகாராஷ்டிராவில் கோவிட்-19 பாதிப்பு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஜனவரி முதல் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 106 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவற்றில் 101 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் புனே, தானே மற்றும் கோலாப்பூரைச் சேர்ந்தவர்கள் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாக மத்தியசுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.