பொழுதுபோக்கு
மதுரையில் கோயில் கட்டிய ரசிகர்கள்… இப்போது பெரிய அரசியல்வாதி; போட்டோவில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா?
மதுரையில் கோயில் கட்டிய ரசிகர்கள்… இப்போது பெரிய அரசியல்வாதி; போட்டோவில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா?
குஷ்பு சுந்தர் இன்ஸ்டா பதிவில் அவர் தனது குழந்தைபருவ புகைப்படங்களை வெளியிட்டு பழைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில், “குழந்தைப் பருவத்தின் பயணம்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும் பல நட்சத்திரங்கள் இதற்கு கமெண்ட் செய்துள்ளனர்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் குஷ்பு சுந்தர். நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய இவர், 1980 ஆம் ஆண்டில் தி பர்னிங் டிரெயின் என்ற திரைப்படத்துடன் மூலம் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். 1980 மற்றும் 1985 க்கு இடையில், நசீப், லாவாரிஸ், காளியா, தர்த் கா ரிஷ்தா மற்றும் பெமிசல் போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.இப்படியாக தொடங்கிய குஷ்பூவின் சினிமா பயணம், 90 களில் உச்சத்தில் இருந்த ஜோடியாக நடிகர்கள் பிரபு மற்றும் குஷ்பு தமிழ் சினிமாவில் வலம் வந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து தர்மத்தின் தலைவன், வெற்றி விருதா, மை டியர் மார்த்தாண்டன், சின்ன தம்பி, பாண்டித்துரை, உத்தமராசா, மறவன், சின்ன வாத்தியார் போன்ற ஹிட் படங்களை கொடுத்தனர்.விரைவில் ஒவ்வொரு இயக்குனரும் தமிழ் துறையில் பணியாற்ற விரும்பிய மிகவும் நம்பகமான நடிகைகளில் குஷ்பூ ஒருவரானார். வெள்ளித்திரைக்கு பிறகு சின்னத்திரை துறையிலும் நுழைந்து பின்னர் அரசியலில் நுழைந்தார். அவர் கடைசியாக ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்தார். தற்போது பாஜகவுடன் கூட்டணியில் உள்ளார்.