பொழுதுபோக்கு

‘மாமன்’ திரைப்பட வெற்றியைக் கொண்டாடிய நடிகர் சூரி: மருதமலை கோயிலில் சாமி தரிசனம்

Published

on

‘மாமன்’ திரைப்பட வெற்றியைக் கொண்டாடிய நடிகர் சூரி: மருதமலை கோயிலில் சாமி தரிசனம்

நகைச்சுவை நடிகர் சூரி, தற்போது கதையின் நாயகனாக நடித்து வெளிவந்துள்ள ‘மாமன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்று (மே 22) கோவையில் உள்ள மருதமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.கோவையில் அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக வந்திருந்த நடிகர் சூரி, நிகழ்ச்சி முடிந்தவுடன் மருதமலை முருகன் கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டார்.  சாமி தரிசனத்திற்குப் பிறகு, கோயிலில் இருந்த பக்தர்கள் மற்றும் ரசிகர்களைச் சந்தித்த சூரி, ‘மாமன்’ திரைப்படத்தைப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். சமீப காலமாக நகைச்சுவைக் கதாபாத்திரங்களைக் கடந்து குணச்சித்திர மற்றும் நாயகன் வேடங்களில் கலக்கி வரும் சூரிக்கு, ‘மாமன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது.செய்தி – பி. ரஹ்மான்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version