இலங்கை
மாவனெல்ல விபத்தில் பாதசாரி உயிரிழப்பு
மாவனெல்ல விபத்தில் பாதசாரி உயிரிழப்பு
மாவனெல்ல கொழும்பு-கண்டி வீதியில் உள்ள பெலிகம்மன விகாரைக்கு முன்னால், கார் ஒன்று பாதசாரி மீது மோதியதில் பாதசாரி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்து சம்பவ்ம இன்று (22) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர், வரக்காபொல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார்.
கண்டியிலிருந்து மாவனெல்ல நகரத்தை நோக்கிச் சென்ற கார், அதே வீதியில் மாவனெல்ல நகரத்தை நோக்கி நடந்து சென்ற பாதசாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பாதசாரி வீதியின் நடுவில் வீசப்பட்டு, கண்டியிலிருந்து மாவனெல்ல நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூடன் மோதியுள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சடலம் மாவனெல்ல மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய கார் சாரதி மற்றும் பஸ் சாரதி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.