சினிமா

யாரும் முகம் சுளிக்கும் வகையில் இருக்க கூடாது….!ரசிகர்களுக்கு சூரி கொடுத்த அட்வைஸ்….!

Published

on

யாரும் முகம் சுளிக்கும் வகையில் இருக்க கூடாது….!ரசிகர்களுக்கு சூரி கொடுத்த அட்வைஸ்….!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சூரி முக்கிய இடம் வகின்றார். தற்போது நகைச்சுவை நடிகராக அறிமுகிய இவர் தற்போது ஹீரோவா நடித்து வருகின்றார். “மாமன்” திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று வருவதுடன் வசூல் ரீதியிலும் சாதனை பெற்று வருகின்றது. தற்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் சூரி கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. “மாமன்” திரைப்படம் மே 16 ஆம் திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கித்தில் சூரி மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், ஸ்வாசிகா,பால சரவணன், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர் ஆகியோர் நடடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார் .மேலும் படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் சூரி கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அதாவது “எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதை எழுதி வருவதாகவும் சினிமா பயணம் நன்றாக சென்று கொண்டிருப்பதாகவும் ரசிகர்கள் இல்லை என்றால் நான் இல்லை என்றும் கூறியிருந்தார்.தொடர்ந்து கூறுகையில் ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும்.”வேண்டுதல் என்ற பேரில் யாரும் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம்”ரசிகர்கள் படங்களை கொண்டாடும் விதம் நல்ல அழகானதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version