இலங்கை

வைத்தியசாலையில் நேர்ந்த விபரீதம் ; நோயாளி ஒருவருக்கு நேர்ந்த கதி

Published

on

Loading

வைத்தியசாலையில் நேர்ந்த விபரீதம் ; நோயாளி ஒருவருக்கு நேர்ந்த கதி

பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி கூர்மையான ஆயுதத்தால் தன்னை தானே தாக்கி கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 18ஆம் திகதி மாத்தளையில் இருந்து வந்த 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான இவர், வைத்தியசாலையின் 18ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Advertisement

இவர் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பொலன்னறுவை வைத்தியசாலையின் 23ஆவது வார்டில் 5 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இந்த நோயாளி, இன்று (22) பிற்பகல், தன்னிடம் வைத்திருந்த பழம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சிறிய கத்தியால் தனது மார்பு பகுதியில் காயப்படுத்தி தற்கொலை செய்து கொண்டார்.

வைத்தியசாலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

Advertisement

நோயின் காரணமாக ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version