வணிகம்
நகைக் கடன் விதிமுறைகள் 2025: ஆர்.பி.ஐ போட்ட 9 ரூல்ஸ் – சாமானியருக்கு சாதகமா? பாதகமா?
நகைக் கடன் விதிமுறைகள் 2025: ஆர்.பி.ஐ போட்ட 9 ரூல்ஸ் – சாமானியருக்கு சாதகமா? பாதகமா?
ரிசர்வ் வங்கி, 2025 ஆம் ஆண்டில் தங்க நகை கடன்களுக்கான 9 புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் சில விதிமுறைகள் சாமானிய மக்களுக்கு சிரமம் அளிக்கும் வகையில் இருக்கிறது என்று பலரும் கூறுகின்றனர். அந்த வகையில், ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் குறித்து பாஸ் வாலா யூடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.கடன் மதிப்பு விகிதம் (LTV) 75 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது, உங்கள் தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்டுமே கடன் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைக்கு, ரூ. 7500 வரை மட்டுமே கடனாக கொடுக்கப்படும். இந்த விதிமுறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இரண்டுக்குமே பொருந்தும்.இரண்டாவதாக, நாம் அடமானம் வைக்க எடுத்துச் செல்லும் நகை, நம்முடையது தான் என்று நிரூபிக்கும் வகையில் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில், தங்க நகை வாங்கிய பில்கள் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். அப்போது தான் நகைக் கடன் கொடுக்கப்படும்.மூன்றாவதாக, நாம் அடமானம் வைக்கும் தங்கத்தின் தூய்மைச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்கம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்தபடியாக, நாம் அடமானம் வைப்பதற்காக கொண்டு செல்லும் அனைத்து நகைகளுக்கும் கடன் வழங்கப்பட மாட்டாது. அந்த வகையில், நாம் கொண்டு செல்லும் தங்க நகை 22 கேரட் அல்லது அதற்கு மேற்பட்ட தரம் கொண்டதாக இருந்தால் மட்டுமே அதற்கு கடன் வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதுவே உங்களிடம் 18 கேரட் மதிப்பிலான தங்கம் மட்டுமே இருந்தால், அதற்கு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதாவது, அந்த 18 கேரட் தங்கத்தை 22 கேரட் தங்கமாக மாற்றும் போது அதன் மதிப்பு இன்னும் குறையும். அதற்கான மதிப்பில் இருந்து 75 சதவீதம் வரை கடன் வழங்கப்படலாம். அடுத்தபடியாக, அதிகபட்ச தங்க நகைக் கடன் பெறுவதற்கான வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒரு நபர் 1 கிலோ வரையிலான தங்கத்தை மட்டுமே அடமானம் வைத்து நகைக் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்போது, தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளி நகைகளையும் வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளி நகை அல்லது வெள்ளி நாணயத்தின் தூய்மை அளவு குறைந்தபட்சம் 925 இருந்தால் மட்டுமே அதற்கு கடன் வழங்கப்படும்.வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் இருந்து கொடுக்கப்படும் நகைக் கடன் ஒப்பந்தம் தெளிவாகவும், விரிவாகவும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதில், நகை வாங்கிய விவரம், அதன் எடை உள்ளிட்ட தகவல்கள், கடனை செலுத்த தவறினால் அதனை ஏலத்தில் விடப்படும் நடைமுறைகள் போன்ற அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கடனை திருப்பி செலுத்தியவுடன் சம்பந்தப்பட்ட நகைகளை 7 நாட்களுக்குள் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு கொடுக்க தவறினால் அதற்காக ஒவ்வொரு நாளும் ரூ. 5000 வீதம் வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.