இலங்கை
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல்
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல்
இலங்கையில் இறக்குமதி தடை நீக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 200 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவரையில் 450 மில்லியன் டொலருக்கான கடனுறுதிக் கடிதம் விநியோகிக்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு, வாகன இறக்குமதிக்கு, 1 பில்லியன் டொலரை ஒதுக்குவதாக அரசாங்கம் ஏலவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.