இலங்கை

பட்டப்பகலில் நடுவீதியில் நேர்ந்த கொடூரம் ; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயம்

Published

on

பட்டப்பகலில் நடுவீதியில் நேர்ந்த கொடூரம் ; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயம்

திருகோணமலை கந்தளாய் பகுதியில் இரு நபர்களளுக்கு இடையில் ஏற்றபட்ட தகராறாரில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று பகல் சன நெரிசல் அதிகம் காணப்படும் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

Advertisement

இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையே இவ்வாறு கூரிய ஆயுத தாக்குதலாக மாறியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான நபரின் தாயார் கருத்து தெரிவிக்கையில்,

எனது மகனுக்கும், குறித்த நபருக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தாக்குதலானது இடம்பெற்றுள்ளது.

Advertisement

தமது கடைக்குள் நுழைந்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. தாக்குதலில் ஏற்பட்ட காயத்தினால் 25 தையல்கள் போடப்பட்டுள்ளன.

எனது பாதுகாப்புக்காக எனது மகன் மாத்திரமே காணப்படுகிறார்.

இதுபோன்ற குற்றங்கள் இடம்பெற பொலிஸார் அனுமதிக்ககூடாது” என தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version