இலங்கை
பாடசாலைகளில் தமிழ் – சிங்கள மொழி பாடம் கட்டாயம்
பாடசாலைகளில் தமிழ் – சிங்கள மொழி பாடம் கட்டாயம்
அனைத்து பாடசாலைகளிலும் தமிழ் – சிங்கள மொழி பாடம் கட்டாயமாக்கப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகவும், தமிழ் மாணவர்கள் சிங்களத்தை இரண்டாவது மொழியாகவும் கற்ற வேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்க வேண்டும்.
அதேவேளை, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக கற்க வேண்டும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் ஆசிரியர்களுக்கு குறித்த மொழிகளைக் கற்பிக்க பயிற்சி அளிக்கப்படும் வரை இந்தத் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் கூறினார்.