இலங்கை
மீண்டும் வெளிநாட்டுக்கு பயணமாகும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க
மீண்டும் வெளிநாட்டுக்கு பயணமாகும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் எதிர்வரும் 10 ஆம் திகதி தொடங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அவர் ஜேர்மன் நாட்டுக்கே உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.
கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி முதலில் இந்தியாவிற்கும் பின்னர் சீனாவிற்கும் விஜயம் செய்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்த பின்னர், ஜனாதிபதியின் முதல் ஐரோப்பிய பயணமாக இந்த ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயம் அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.