இலங்கை
யாழில் ஆலய உண்டியலுடன் மோதிய முதியவருக்கு நேர்ந்த துயரம்
யாழில் ஆலய உண்டியலுடன் மோதிய முதியவருக்கு நேர்ந்த துயரம்
வீதியோரமாக இருந்த ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் சரசாலை பகுதியை சேர்ந்த 71வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில், தனிப்பட்ட தேவைக்காக வெளியில் சென்ற சமயம், கொடிகாமம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த சீமெந்தினால் ஆனா உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மயக்கமடைந்துள்ளார்.
அவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.