இலங்கை

வடக்கில் தலைவிரித்தாடும் லஞ்சம்; தடுக்க வேண்டியவர்களே இப்படியா?

Published

on

வடக்கில் தலைவிரித்தாடும் லஞ்சம்; தடுக்க வேண்டியவர்களே இப்படியா?

 லஞ்சம் பெற்ற  வவுனியா பூவரசங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரியை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்;டுள்ளது.

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் காணி பிணக்கொன்றை தீர்க்கவென நிலைய பொறுப்பதிகாரி 25 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற முற்பட்ட போது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று முன் தினம் (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கொழும்பில் இருந்து வருகை தந்த ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டது.

அத்துடன் வழக்கு 27ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு நீமன்றுக்கு மாற்றப்படவுள்ளார்.

Advertisement

அதேவேளை யுத்த காலத்திலும் அதன் பின்னராகவும் சிங்கள முப்படைகள் முதல் காவல்துறை வரை வருமானம் ஈட்டும் பிரதேசமாக வடமாகாணம் உள்ளது.

விடுதலைப்புலிகளால் பேணிப்பாதுகாக்கப்பட்ட இயற்கை வளங்களை தென்னிலங்கை தரப்புக்களுடன் சேர்ந்து அழிப்பதில் பொலிஸார் உட்பட பொறுப்பு வாய்தவர்கள் தொடர்ந்தும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குற்றங்களை தடுக்க வேண்டியவர்களே குற்றங்களை செய்வது குறித்து சமூக ஆர்வலர்கள் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version