பொழுதுபோக்கு
விஜய் படத்தில் அறிமுகம்; சிவாஜி கையில் இருக்கும் இந்த சிறுமி இப்போ தமிழ் சினிமா வைரல் நடிகை
விஜய் படத்தில் அறிமுகம்; சிவாஜி கையில் இருக்கும் இந்த சிறுமி இப்போ தமிழ் சினிமா வைரல் நடிகை
நடிகர் சிவாஜி கணேசனுடன் தமிழ் நடிகை ஒருவர் குழந்தையாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிரபல தமிழ் நடிகரின் மகளான இவர், தளபதி விஜய்க்கு ஜோடியாக முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார்.ஆம் இந்த படத்தின் இருக்கும் சிறுவயது சிறுமி வனிதா விஜயக்குமார் ஆவர். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். நடிகர் விஜயகுமாருக்கும், இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளாவுக்கும் மூத்த மகளாவார் வனிதா. வனிதாவின் இளைய சகோதரிகளான நடிகைகள் ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரும் நடிகர்கள்.1995 ஆம் ஆண்டில், வனிதா விஜய்யுடன் இணைந்து சந்திரலேகா படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு 1996-ம் ஆண்டு ராஜ்கிரணுடன் மாணிக்கம் படத்தில் நடித்தார் வனிதா. பின்னர் மலையாள திரைப்படமான ஹிட்லர் பிரதர்ஸ் (1997) மற்றும் தெலுங்கு பக்தி கற்பனைத் திரைப்படமான தேவி ஆகியவற்றில் நடித்தார்.ஆகாஷுடனான தனது முதல் திருமணத்திற்குப் பிறகு, 2010 களின் நடுப்பகுதியில் நான் ராஜவாகா போகிரேன் மற்றும் சும்மா நச்சுனு இருக்கு ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டில் பிக் பாஸ் தமிழின் மூன்றாவது சீசனிலும் அவர் தோன்றினார்.