இலங்கை

வானிலை அறிவித்தலால் மக்களுக்கு எச்சரிக்கை!

Published

on

வானிலை அறிவித்தலால் மக்களுக்கு எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, இன்று  முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் என்றும் 

Advertisement

வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகளுக்கு பொதுமக்கள் கவனம் செலுத்துமாறும் 

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Advertisement

மேலும் வட மாகாணத்திலும் அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும்

பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும்

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்

Advertisement

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version