பொழுதுபோக்கு
அறிமுக சீரியலில் அசத்திய நடிகை; தமிழ் ரசிகர்களை ஈர்த்த இந்த சிறுமி காதல் திருமணம் செய்தவர்!
அறிமுக சீரியலில் அசத்திய நடிகை; தமிழ் ரசிகர்களை ஈர்த்த இந்த சிறுமி காதல் திருமணம் செய்தவர்!
சின்னத்திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகை நடிகை ஒருவரின் சிறுவயது பள்ளி மாணவியாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தான் அறிமுகமான ஒரே சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற இந்த நடிகை அடுத்து நடித்த சீரியல் பெரிதாக கவனம் ஈர்க்க வில்லை. இவரின் கணவரும் ஒரு சீரியல் நடிகர் தான். இந்த நடிகை யார் என்று தெரிகிறது.அவர் வேறு யாரும் இல்லை செம்பருத்தி சீரியல் புகழ், ஷபானா ஷாஜஹான், தற்போது அவரது குழந்தைப்பருவப் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பள்ளிச் சீருடையில், தனது மழலைத்தனமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் ஷபானா, ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார். நீல நிற பள்ளிச் சீருடை, இரண்டு பின்னல்கள், வெள்ளை ரிப்பன் என முழுமையான பள்ளி மாணவி தோற்றத்தில், அவரது அப்பாவியான முகம் அனைவரையும் கவர்ந்துள்ளது.இந்தப் படம் அவரது பள்ளி நாட்களில் எடுக்கப்பட்டது எனத் தெரிகிறது, மேலும் ரசிகர்கள் மத்தியில் இது ஒரு பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. ஷபானா ஷாஜஹான், 2016 ஆம் ஆண்டு மலையாளத் தொடரான ‘விஜயதசமி’ மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். ஷங்கர் வளத்துங்கல் இயக்கிய இந்தத் தொடர் சூர்யா டிவியில் ஒளிபரப்பானது. இதில் அருண், குமாரகோம ரகுநாத், கைலாசநாத் மற்றும் விஜயகுமாரி போன்றோர் இணைந்து நடித்தனர். அதே சமயம், ஷபானாவை தமிழக வீடுகளின் செல்லப் பிள்ளையாக்கியது ‘செம்பருத்தி’ தொடர்தான்.2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செம்பருத்தி தொடர், ராம் குமரதாஸ், சுலைமான் கே பாபு, பி நீரவி பாண்டியன், எம் ஷங்கர் மற்றும் ஏ மஞ்சுநாதன் போன்ற பல இயக்குநர்களால் இயக்கப்பட்டது. கார்த்திக் ராஜ் மற்றும் ப்ரியா ராமன் ஆகியோருடன் இணைந்து ஷபானா நடித்த இந்தத் சீரியலை பாலா சுந்தரம் மற்றும் தினேஷ் ரமணா ஆகியோர் தயாரித்தனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’, ஜீ5 ஓடிடி தளத்திலும் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.செம்பருத்தி சீரியல், தெலுங்குத் தொடரான ‘முத்த மந்தாரம்’ இன் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. செம்பருத்தி சீரியலுக்கு பின் ஷபானா ஷாஜஹான் ‘மிஸ்டர் மனைவி’ என்ற தமிழ் தொலைக்காட்சித் தொடரில் பவன் ரவீந்திரனுடன் இணைந்து நடித்தார். 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி கேரளாவில் பிறந்த ஷபானா, மும்பையில் வளர்ந்தார். ஹோலி கிராஸ் கான்வென்ட் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த அவர், நடிப்புத் துறைக்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையிலும் கால் பதித்தவர்.