சினிமா

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

Published

on

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

இசையமைப்பாளர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் ஜி.வி. பிரகாஷ். இவர் வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது தனித்துவமான இசையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.கடைசியாக இவர் இசையில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. கடந்த 2013ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் பிரபல பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். 12 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.இந்த நிலையில், ரசிகர்களின் மனதிலிருந்து நீங்கா இடத்தை பிடித்திருக்கும் ஜி.வி. பிரகாஷின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி ஜி.வி.பிரகாஷின் சொத்து மதிப்பு ரூ. 80 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இவை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version