உலகம்

இந்தியாவுக்கு உதவத் தயாா்; ட்ரம்ப் தெரிவிப்பு!

Published

on

இந்தியாவுக்கு உதவத் தயாா்; ட்ரம்ப் தெரிவிப்பு!

ஏர் -இந்தியா விமான விபத்து, விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும் எனவும் இதில் இந்தியாவுக்கு உதவத் தயாா் தாம் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் செய்தியாளா் சந்திப்பில் அஹமதாபாத் விமான விபத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

Advertisement

இதன்போது, இந்த விமான விபத்து மிகவும் கொடூரமானது, அமெரிக்காவின் உதவி எதாவது தேவையெனில், அதைச் செய்ய நாங்கள் தயாராக இருப்பதாக இந்தியாவிடம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம்.

விபத்தில் பெரும்பாலானோா் இறந்துவிட்டதாகவும் ஒருவா் மட்டுமே உயிா் பிழைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இது விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும் – என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version