இலங்கை

இஸ்ரேல் – ஈரான் மோதல் ; இலங்கையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வு

Published

on

Loading

இஸ்ரேல் – ஈரான் மோதல் ; இலங்கையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வு

இலங்கை அரசுக்கு உரித்தான சுத்திகரிப்பு நிலையத்தில் பயன்படுத்தப்படும் மர்பன் ரக மசகு எண்ணெய், இஸ்ரேல் – ஈரான் மோதலையடுத்து சுமார் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த வாரத்தில் 66.40 அமெரிக்க டொலராக இருந்த மர்பன் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 73.52 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

Advertisement

எவ்வாறாயினும், கடந்த டிசம்பர் மாதத்தில் குறித்த மசகு எண்ணெய் விலை 74 அமெரிக்க டொலரை விடவும் குறைவான நிலையிலிருந்தது.

தற்போது அந்த தொகையை விஞ்சாத நிலையிலேயே குறித்த மசகு எண்ணெய்யின் விலை உள்ளது.

பொருளாதாரத்தைப் பாதுகாக்க இலங்கையிடம் தானியங்கி எரிபொருள் விலைச் சூத்திரம் உள்ளது.

Advertisement

இந்தநிலையில், மசகு எண்ணெய் விலை மேலும் உயர்வடையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version