இலங்கை

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தது தென்னாபிரிக்கா

Published

on

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தது தென்னாபிரிக்கா

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டி ஜூன் 11 முதல் 15 வரை லண்டனில் ​உள்ள லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

Advertisement

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 212 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதன்படி, தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

Advertisement

இந்நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்படி, 282 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அந்த அணி சார்பில் Aiden Markram 136 ஓட்டங்களையும் அணித்தலைவர் Temba Bavuma 66 ஓட்டங்ளையும் பெற்றுக்கொடுத்தனர்.

Advertisement

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Mitchell Starc 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி தென்னாபிரிக்கா அணி முதன்முறையாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version