சினிமா

ஊர்வசி மகள் திரையுலகில் லாண்டிங்.! முதல் படமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுமா.?

Published

on

ஊர்வசி மகள் திரையுலகில் லாண்டிங்.! முதல் படமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுமா.?

மலையாள சினிமாவில் நடிகையாக பரபரப்பாக கலக்கி, தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஊர்வசி. இவர் தற்போது தனது மகள் தேஜலட்சுமியை திரைப்பட உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.”சுந்தரியவள் ஸ்டெல்லா” என்ற புதிய மலையாள திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள தேஜலட்சுமி, சினிமாவிற்குள் தனது முதல் அடியை வைக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.ஊர்வசி என்ற கவிதா ரஞ்சனி 1980-களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் காமெடி, பரபரப்பான குணச்சித்திரங்கள் என அனைத்திலும் தனது திறமையை நிரூபித்திருந்தார். இன்று வரை 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.அந்த அளவுக்கு திறமையும், ரசிகர்களிடையே நம்பிக்கையும் கொண்ட ஒரு நடிகையின் மகளாக திரையுலகத்தில் அறிமுகமாகும் தேஜலட்சுமி, அதனை ஒரு பொறுப்புடனும், பெரும் அர்ப்பணிப்புடனும் எடுத்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version