சினிமா
குபேரா திரைப்படத்தின் நேரத்தை குறைத்த படக்குழு…!ரிலீஸ் திகதிக்கு வெளிவருமா?
குபேரா திரைப்படத்தின் நேரத்தை குறைத்த படக்குழு…!ரிலீஸ் திகதிக்கு வெளிவருமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, பாடகராக ,தயாரிப்பாளராக வலம் வருபவர் தனுஷ். இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார் . தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் குபேரா திரைப்படம் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 20ஆம் திகதி திரைக்கு வர உள்ளது. இதில் நாகர்ஜுனா, ராஸ்மிகா மந்தனா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளார்கள். மேலும் இந்த படத்தை சென்சருக்கு அனுப்பப்பட்டு U/A சான்று வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மீண்டும் குபேரா படம் மீண்டும் சென்சாருக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது . இந்த படத்தை ஜூலை மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில். மேலும் திரைப்படத்தின் பாதி காட்சிகள் குறைக்காமல் அப்படியே சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இந்த திரைப்படம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் காணப்படுவதனாலும் .அதோடு குபேரா படம் மூன்று மொழிகளில் வெளியாக்குவதாலும் ரசிகர்களுக்கு நேரம் அதிகமாக இருப்பது அலுப்பை தட்டும். இதனால் வணிகரீதியாக இந்த படத்தை வாங்க பலரும் தயக்கம் காட்டி வருகின்றார்கள்.இப்போது 14 நிமிடங்கள் குறைத்து 3 மணி நேரம் ஒரு நிமிடமாக மீண்டும் குபேரா படத்தை சென்சாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது . இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.