இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

Published

on

Loading

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன் விடுவிப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Advertisement

இதன்போது, ஊடகங்களுக்குப் கருத்து தெரிவித்த உதய கம்மன்பில; மேற்படி 323 கொள்கலன்களின் பட்டியலைப் பகிரங்கப்படுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். சம்பவம் தொடர்பான முடிவுகளை எடுத்த அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக தகவல்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக வெளிநாட்டு பயணத் தடையை விதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version