டி.வி

சரிகமப சீனியர் 5!! பிரபல இயக்குநர் காலில் விழுந்த தேவயானி மகள் இனியா..வீடியோ..

Published

on

சரிகமப சீனியர் 5!! பிரபல இயக்குநர் காலில் விழுந்த தேவயானி மகள் இனியா..வீடியோ..

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப. தற்போது சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது.இதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி கடந்த சில வாரத்திற்கு முன் நடந்து முடிந்த நிலையில் அறிமுக சுற்று நடந்து முடிந்துள்ளது. அதில் பல போட்டியாளர் சிறப்பாக பாடி அனைவரது கவனத்தை ஈர்த்ததோடு எமோஷ்னலாக உருகவும் வைத்திருக்கிறார்கள்.இந்நிலையில் சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் நடிகை தேவயானியின் மகள் இனியாவை சப்போர்ட் செய்ய பிரபல இயக்குநர் லிங்கு சாமி நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.அவரை பார்த்த தேவயானி உருகியபடி மேடைக்கு வந்தார். அதன்பின் தேவயானி மகள் இனியா, லிங்குசாமி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கிறார். அதன் பிரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version