இந்தியா

சிந்து நதிநீர் விவகாரம் : இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான்!

Published

on

சிந்து நதிநீர் விவகாரம் : இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி இந்தியாவை எச்சரித்துள்ளார்.

பஹலகாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ராஜாங்க ரீதியாகவும், ராணுவ ரீதியாவதும் பாகிஸ்தான் மீது இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்தது.

Advertisement

அதன்படி பாகிஸ்தானுடன் ஏற்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு துணை ஆறுகள் மூலம் செல்லும் நதிநீர் நிறுத்தப்படுவதால் அந்நாட்டு கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும்.

எனவே நதிநீர் நிறுத்தம் இந்தியாவின் போர் நடவடிக்கை என பாகிஸ்தான் கூறுகிறது. சிந்து நதியில் தண்ணீர் ஓட வில்லை என்றால் ரத்தம் ஓடும் என அந்நாட்டு அரசியல் அரசியல் தலைவர் பிலாவல் பூட்டோ எச்சரிக்கை வைரலானது.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அகமது ஷெரீப் சவுத்ரி, இந்தியாவைக் குறிப்பிட்டு, “நீங்கள் எங்கள் தண்ணீரைத் தடுத்து நிறுத்தினால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம்” என்று பேசியிருக்கிறார்.

Advertisement

2008 மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரும், லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவனருமான ஹபீஸ் சயீதும் கடந்த காலங்களில் இதே பாணியில் மிரட்டல்களை விடுத்துள்ளார். அதே பாணியில் லெப்டினன்ட் ஜெனரல் பேசிய இந்தக் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version