இலங்கை

டெங்கு நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள்!

Published

on

Loading

டெங்கு நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள்!

நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களில் சுமார் 25 வீதமானோர் பாடசாலை மாணவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, 50 வீதமான பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். அவற்றில் 14 வீதமான இடங்களில் நுளம்பு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisement

இந்நிலையில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை சூழலை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம் என வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, பாடசாலைகளில் டெங்கு நோய் கட்டுப்படுத்தலுக்கான புதிய சுற்றறிக்கையை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பாடசாலைகளில் வயலங்களாகப் பிரித்து அவற்றை சுத்தம் செய்து பொறுப்பான ஆசிரியரை நியமிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

பாடசாலைகளில் டெங்கு நுளம்பு இல்லாத வலயங்களாக மாற்றுவதற்கு சுகாதாரத் துறையுடன் இணைந்து விசேடத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24,361 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version