சினிமா

பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் நேற்றுக்காலமானார்!

Published

on

பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் நேற்றுக்காலமானார்!

பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகரான ராஜேஷ் உடல் நலக் குறைவு காரணமாக தனது 75ஆவது வயதில் நேற்று காலமானார்.

1949ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்த இவர், திரையுலகில் மிகப் பிரபலமான நடிகர்களுள் முக்கியமானவர்.

Advertisement

1970 மற்றும் 1980 களில் மாறுபட்ட, அழுத்தமான பாத்திரங்களில் நடித்த,  ராஜேஷ் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பதித்திருந்தார்.

1974 இல் இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் நடிகர் ராஜேஷ் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர்,  தமிழில் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உட்பட பரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version