இலங்கை
பூநகரிப் பிரதேசசபை கன்னியமர்வு ஆரம்பம்!
பூநகரிப் பிரதேசசபை கன்னியமர்வு ஆரம்பம்!
கிளிநொச்சி பூநகரிப் பிரதேசசபையின் முதலாவது கன்னியமர்வு சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன் தலைமையில் நேற்று ஆரம்பமாகியது. 20 உறுப்பினர்களைக்கொண்ட பூநகரிப் பிரதேசசபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பாக 10 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக மூன்று உறுப்பினர்களும், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பாக மூன்று உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக ஒரு உறுப்பினரும், அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் சார்பாக ஒரு உறுப்பினரும் சுயேச்சைக்குழு சார்பாக ஒரு உறுப்பினரும், சுயேச்சைக்குழு-2 சார்பாக ஒரு உறுப்பினரும் இடம்பெற்றுள்ளனர்.