இலங்கை

பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தானசாலைகள்!

Published

on

பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தானசாலைகள்!

2025 பொசன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 19,185 பொசன் தானசாலைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர்  விசேட மருத்துவர் லக்ஷ்மி சோமதுங்க தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தானசாலையை ஒழுங்கு செய்வதற்கான விரிவான வழிகாட்டுதல்கள்” என்ற தலைப்பில், கடந்த 2025 மே 6 ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட வழிகாட்டுதல் தொடர் வெளியிடப்பட்டது.

Advertisement

இந்த வழிகாட்டுதல்களில், சுகாதார அதிகாரிகளுடன் தானசாலைகளை பதிவு செய்தல், பொது சுகாதார பரிசோதகர்களால் தகவல்களை சேகரித்தல், உணவு தயாரிப்பவர்களின் தனிப்பட்ட சுகாதாரத்தை உறுதி செய்தல், உணவு கையாளுபவர்கள் பின்பற்ற வேண்டிய கை சுத்தமாக வைத்திருத்தல் தொடர்பான சுகாதார நடைமுறைகள், உணவு கையாளுபவர்களின் சுகாதார நிலை, பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், உணவு தயாரித்தல், கழிவு அகற்றல், உணவு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பரிசோதனை ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version