உலகம்

மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்!

Published

on

மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்!

மங்கோலியாவில் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் தலைமையிலான மங்கோலிய மக்கள் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இவரது மகன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையே அவர் தனது காதலியுடன் சுற்றித்திரிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதில் விலை உயர்ந்த ஏராளமான பைகள் இருந்தன. இது பெரும் விவாத பொருளான நிலையில் பிரதமர் பதவி விலக கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார்.

Advertisement

தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் போதிய பெரும்பான்மையை அவர் பெறவில்லை. எனவே தனது பதவியை லவ்சன்னம்ஸ்ரைன் ராஜினாமா செய்துள்ளார்.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version