சினிமா

மோசமான விமர்சனம்.. தக் லைஃப் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா

Published

on

மோசமான விமர்சனம்.. தக் லைஃப் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தக் லைஃப் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளிவந்தது. மணி ரத்னம் – கமல் ஹாசன் கூட்டணியில் உருவான இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ஆம், படம் நல்லா இல்லை என்பதே பெரும்பான்மையான ரசிகர்களின் கருத்தாக உள்ளது. மிகப்பெரிய ஏமாற்றத்தை கமல் – மணி ரத்னம் கொடுத்துவிட்டனர் என வருத்தத்துடன் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன்கள் இப்படத்தை இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள்.மோசமான விமர்சனங்களை சந்தித்து வரும் தக் லைஃப் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. என்னதான் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தாலும், தக் லைஃப் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 46 கோடி வசூல் செய்துள்ளது.ஆனால், முதல் நாள் மட்டுமே இந்த வசூல் கிடைத்துள்ளது, இனி வரும் நாட்களில் கண்டிப்பாக வசூல் குறையும் என திரை வட்டாரத்தில் கூறுகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version