இலங்கை

யாழில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் வெட்டிக்கொலை

Published

on

யாழில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் வெட்டிக்கொலை

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் இரண்டு தரப்புகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருபாலை – மடத்தடி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டார்.

குறித்த பகுதியில் நேற்று முற்பகல் கோப்பாய் பொலிஸார் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகக் கூறப்படும் குறித்த நபர் நேற்றிரவு தமது வீட்டுக்குச் சென்ற நிலையில், அவர் மீது கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் தரப்பினர் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காயமடைந்த குறித்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதேநேரம், தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தாக்குதலை மேற்கொண்டவர்களில் பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version